கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் பிரிவுக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தனபதன்(28) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் தனபதனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.30,000 மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில்,
ஒடிசா மாநில இளைஞர் இங்கு முதலில் கூலி வேலைக்கு தான் வந்துள்ளார். தனியார் தொழில்நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கூலி வேலையில் அவருக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை என கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்,” என்றனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு