• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதானியை பற்றி மக்களவையில் கேள்வி கேட்டதால் ராகுல்காந்தி குறி வைக்கப்படுகிறார்

April 8, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அழகு ஜெயபால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பிரதமர் மோடி அதானிக்காக ஜனநாயகத்தை அழிக்க தயாராகி விட்டதாகவும் அதானியை பற்றி மக்களவையில் கேள்வி கேட்டதால் ராகுல்காந்தி குறி வைக்கப்படுகிறார் எனவும் தெரிவித்தார். மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளை பட்டியலிட்டார்.அதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்தது குறித்து பேசிய அவர், சூரத் நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற மேஜிஸ்ட்ரேட் வருமா முன்னிலையில் விசாரணை விரைவாக நடக்க தொடங்கி 24 நாட்களில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அவசர அவசரமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது எனவும், தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்தில் மக்களவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டு பின்னர் தங்கி இருந்த வீட்டை விட்டு வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது எல்லாம் அப்பட்டமான பழிவாங்கும் போக்கு என தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பேசியதற்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் எந்த அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது? என கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி குடியிருப்பது தலைநகர் டெல்லியில் என தெரிவித்த அவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேறியுள்ளதாக விமர்சித்தார். மேலும் மூன்று ஆண்டுகள் கிடப்பிலிருந்த வழக்கு 24 நாட்களில் விசாரிக்கப்பட்டு அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியது ஏன்? வழக்கு தொடுத்தவரே வழக்கிற்கு எதிராக ஓராண்டு தடை பெற்று திரும்ப அவசர அவசரமாக விலக்கிக் கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதி பொறுப்பேற்றார் எனவும் தெரிவித்தார். இத்தகைய சர்வாதிகார பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழிகாட்டுதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீவிரமான பரப்புரை மூலம் மக்கள் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க