• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.ஓ எனும் புதிய ஜுவல்லரி கலெக்சனை அறிமுகம் செய்தது ஜுவல் ஒன் !

April 8, 2023 தண்டோரா குழு

இளம் தலைமுறையினரை கவரும் பிரத்தியேக ஜெ.ஓ.எனும் மாடல் நகைகளை எமரால்டு ஜுவல்லரி இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் ஓர் அங்கமான ஜுவல் ஒன் கோவையில் அறிமுகம் செய்துள்ளது.

நகை வடிவமைப்பில் மிகவும் அனுபவம் மிக்க கலைஞர்களால், கலைநயத்துடன் உருவாக்கி விற்பனை செய்வதில் தனி முத்திரை பதித்து வரும், எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்திய அளவில் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

கலை நயத்துடன் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து செயல்படுத்தி ஆபரண விற்பனை துறையில் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டு வந்துள்ள இந்நிறுவனத்தின்,ஜெ.ஓ எனும் புதிய ஜுவல்லரி கலெக்சன் அறிமுக விழா, கோவை துடியலூர் அடுத்துள்ள ராக்கிபாளையம் பகுதியில் செயல்படும் கோவை ஜுவல் ஒன் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் நடைபெற்றது.

எமரால்டு ஜுவல்லரி சேர்மன் கே.ஸ்ரீனிவாசன் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் ஆகியோர் புதிய நகைகளை அறிமுகம் செய்து பேசினர்.குறைந்த எடையில், அழகிய எலைட் டிசைன்களில், காலத்திற்கேற்ற ட்ரெண்டான கலெக்ஷனில் இந்த நகைகள் பெண்களின் விருப்பத்தை அறிந்து வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

ஜூவல் ஒன் பிராண்ட் நகைகள் பெண்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்புவதாக கூறிய அவர்,’ இந்த ஜெ. ஓ கலெக்சன் தமிழகம் முழுவதும் உள்ள 55 க்கும் மேற்பட்ட ஜுவல் ஒன் ஷோரூம்களிலும், 12 ஜுவல் ஒன் பிரத்தியேக ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். பெஸ்ட் குவாலிட்டி, பெஸ்ட் பியூரிட்டி, பெஸ்ட் டிசைன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிமுகம் செய்து வைத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.அதே போல எமரால்டு நிறுவனத்தின், தயாரிப்புகளாக, வைரம், பிளாட்டினம் நகைகளையும் ஜுவல் ஒன்,விற்பனை செய்வதாக கூறிய அவர்,இந்த கலெக்ஷனில் கீழ் ரோஸ் கோல்ட் நகைகளும், ஐரோப்பாவை சேர்ந்த பெர்ஷோஷா கற்கள் பதிக்கப்பட்ட நகைகளும் விற்பனைக்கு உள்ளன.

ஏழாயிரம் ரூபாயிலிருந்து இந்த நகைகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தனர்.. இந்நிகழ்ச்சியில் ஸ்டார் பிக் பஜார் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரபு, மற்றும் பிரியங்கா ரங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க