• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பாக 5வது கோடைகால தடகள பயிற்சி முகாம்

April 5, 2023 தண்டோரா குழு

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பாக 5வது கோடைகால தடகள பயிற்சி முகாம் துவங்கப்பட்டது.

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பாக 5வது கோடைகால தடகள பயிற்சி முகாம் மூத்தோர் சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மைதிலி மற்றும் தலைமை புரவலர் மன்சூர் முகாமை கொடியேசைத்து துவக்கி வைத்தார். இவ்வாண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் மே மாதம் 28ஆம் தேதி வரை நேரு விளையாட்டரங்கம்(காலை) மற்றும் PN Pudhur விளையாட்டு மைதானத்தில் ( மாலை ) மற்றும் பயணியர் கல்லூரி ஜோதிபுரம் ,கொடிசியா ஆகிய இடங்களில் நடத்தப்படவுள்ளது .

இதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன . இதில் உடற்பயிற்சி, தடகள சிறப்பு பயிற்சி ( தாண்டுதல், குதித்தல், ஓடுதல் ), எடை குறைத்தல் பயிற்சி, சிறப்பு பளு தூக்குதல், போலீஸ் தேர்வுக்கான் உடற்பயிற்சி, யோகா, மணல் பயிற்சி, மலை பயிற்சி போன்ற விளையாட்டு கலைகள் கற்றுத் தரப்படுகின்றது. மேலும் விளையாட்டில் மிகச்சிறந்த வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, படிப்பு உதவி மேலும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உணவு, பயணம்,தங்குமிடம் போன்ற அனைத்து செலவுகளும் ACADEMY சார்பில் வழங்கப்படுவதாக அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஜோஸ்வா தெரிவித்தார்.

பயிற்சி முகாமில் ஆறு வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும் அக்காவிடமியில் பயிற்சி பெற்ற வரும் மாணவ மாணவிகள் மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கத்தை வென்றுள்ளனர் பயிற்சி முகாமில் பயிற்சியாளர் மார்ஷல் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க