• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2030க்குள் இந்தியா 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்யும்

April 3, 2023 தண்டோரா குழு

ஒன்றிய அரசு புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு (சிட்டி) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:

இந்த முக்கியமான கொள்கையை அறிமுகம் செய்த ஒன்றிய தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயலுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை மூலம் இந்தியாவில் நடைபெறும் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் நிகழும். வர்த்தகம் செய்வது தொழில்நுட்பம் மூலம் இன்னும் பெரிதாகவும், எளிதாகவும் அமையும். இதனால் உலக அளவில் எழும் பல வர்த்தக சவால்களுக்கும், பொருளாதார சவால்களுக்கும் இந்தியாவால் தீர்வு வழங்க முடியும்.

அந்த அளவிற்கு இந்தியா வளர இந்த கொள்கை வழிவகுக்கும். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலின் வழிகாட்டுதலில் இந்தியா இந்த நிதி ஆண்டில் 760 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை கடக்கும். தற்போது அறிமுகமாகியுள்ள புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையினால் 2030ம் ஆண்டிற்குள் உறுதியாக இந்தியா 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்யும்.

ஜவுளி மற்றும் ஆடை துறை என்பது இந்தியாவின் மொத்த மெற்சண்டைஸ் ஏற்றுமதிகளில் 8-9 சதவீதம் கொண்டது. இந்த ஏற்றுமதிகள் வெற்றி பெற குறித்த நேரத்திற்கு சரக்குகள் ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும். புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் இணையவழி மூலம் ஒப்புதல்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 1 மாதம் வரை ஆகும் விவரங்கள் சரிபார்க்கும் நடவடிக்கைகள் இனி 1 நாட்களில் முடிக்க முடியும். இதனால் ஜவுளி மற்றும் ஆடை துறை பெரிதும் பலன் பெறும்.

இந்த புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் பிற நாடுகளுக்கு ரூபாய் மூலம் கட்டணம் செலுத்தக்கூடிய அம்சம் என்பது சர்வதேச அளவில் இந்திய ரூபாயை வலுப்படுத்த உதவக்கூடிய ஒரு திட்டமாக அமையும். இதனால் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் நட்பு நாடுகளான பங்களாதேஷ், ரஷ்யா, இலங்கை மற்றும் இதர நாடுகளுடன் மிகவும் ஏற்றத்துடன் இருக்கும்.

நேரம் மற்றும் பரிவர்த்தனைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் சரியான புது திட்டங்களும், நடைமுறையில் எளிமைப்படுத்தும் அம்சங்களும் இருப்பதால் நிச்சயமாக பிரதமரின் மேக் இன் இந்தியா மற்றும் மேக் போர்வேர்ல்ட் திட்டங்களில் இலக்குகளை அடைய இந்த கொள்கை உதவ முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க