• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘துக்க வீட்டிற்கு சென்று விட்டு என் வீட்டு வழியாக செல்ல கூடாது’ -ஒருவர் கொலை -2 பேர் கைது

April 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூர் பகுதியில் ரங்கசாமி (40) என்பவர் வசித்து வந்தார். இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள அண்ணா நகரில் தனது உறவினரின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (55) மற்றும் அவரது மனைவி தாமரை (40) ஆகிய இருவரும் ரங்கசாமியை வழிமறித்து துக்க வீட்டிற்கு சென்று விட்டு என் வீட்டு வழியாக செல்ல கூடாது என்று தகராறு செய்தார். இதனால் ரங்கசாமி மற்றும் கோவிந்தராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் தன் வீட்டின் முன் இருந்த உருட்டு கட்டையை அவரது மனைவி எடுத்து கொடுக்க ரங்கசாமியின் தலையில் தாக்கினார்.இதில் படுகாயம் அடைந்து ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடி தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் கோவையில் பதுங்கி இருந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தாமரையையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க