• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலவச ஆரம்பநிலை கிளினிக்கை துவக்கியது சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை

April 2, 2023 தண்டோரா குழு

கோவையை மையமாக கொண்டு செயல்படும் சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மற்றும் ஏழை மக்கள் பயன்பெறகூடிய வகையில் இலவச ஆரம்பநிலை கிளினிக் ஈச்சனாரி பிரிவு அருகே துவங்கப்பட்டது.

ராவ் ஹாஸ்பிடலின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆஷா ராவ்,கங்கா மருத்துவமனை டாக்டர். ராஜ சண்முக கிருஷ்ணன், தன்வந்திரி மருத்துவமனை மருத்துவர் திலிப், சாரதா பழனிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த மையத்தை டாக்டர் பழனிசாமி, சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நிறுவனர் சிவநேசன், அறக்கட்டளையின் தலைவர் சசிகலா சத்தியமூர்த்தி மற்றும் பல சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இந்த இலவச கிளினிக் பற்றி சசிகலா பேசுகையில்,

சிறியவர்,பெரியவர் என அணைத்து வயதினரும் இந்த மையத்தின் மூலம் பலனடைய முடியும் என்று கூறினார்.இங்கு அணைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நல்ல தகுதியுடைய மருத்துவர் ஒருவர் பொதுமக்களின் மருத்துவ உதவிக்கு பணிபுரிவர்.ஒரேவேளை இங்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதலான மருத்துவ உதவி தேவை என்றால் கோவை மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற வசதியாக அறக்கட்டளை சார்பில் சிபாரிசு செய்யப்படும் என சசிகலா தெரிவித்தார்.

இதேபோல், மருத்துவ உதவிகள் இன்னும் சேராத பகுதிகளில் இதுபோன்ற இலவச கிளினிக்கை அமைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுற்றுசூழல், ஆரோக்கியம், திறன் மேம்பாடு ஆகிய 7 பிரிவுகளில் மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த அறக்கட்டளை தற்போது வரை 1,428 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களை ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தியோ அல்லது அவர்களுக்கான சிறு தொழிலை அமைத்தோ தந்துள்ளதாக சசிகலா குறிப்பிட்டார்.

இந்த முன்னேற்றத்தை தங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ள சமூக நலன் மீது அக்கறை கொண்ட நல்ல உங்களால் தான் செய்ய சாத்யமாவதாக கூறிய அவர், எளிய மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட யாராயினும் தங்களுடன் இனைந்து பயணிக்கலாம் என்று தெரிவித்தார்.இதில் சந்திரா யுவா பவுண்டேஷன் இயக்குனர்கள், தன்னார்வலர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க