• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வரி செலுத்தாமல் அதிக நிலுவை தொகை வைத்துள்ள நபர்களுக்கு எச்சரிக்கை

March 29, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் அதிக வரி வருவாய் ஈட்டும் மாநகராட்சிகளில் கோவை சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி விதிப்பு இனங்கள் உள்ளன. நடப்பு 2020-22-ம் நிதியாண்டில் நிலுவைத் தொகை மற்றும் நடப்புத் தொகை இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.377 கோடி வரித் தொகை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டிலும் 100 சதவீத வரி விதிப்பு என்பது எங்களது இலக்காக உள்ளது. கடந்த நிதியாண்டில் கொரோனா தொற்றின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் 93 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் முழு இலக்கை எட்ட, கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரை நிதியாண்டு முடிந்ததில் இருந்து இலக்கை அடைய வரித் தொகை வசூலை மாநகராட்சி நிர்வாகம் வேகப்படுத்தியுள்ளது. இதற்காக வரி வசூலிப்பு மையங்களில் தேவையான நேர மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரித் தொகை நிலுவை வைத்துள்ளவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இணையதளம் வாயிலாக சொத்து வரி உள்ளிட்டவை எவ்வித சுணக்கமும் இல்லாமல் பொதுமக்கள் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கில் 70 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையிலும் குறிப்பிட்ட சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எப்படியும் நிதியாண்டு இறுதியில் 98 சதவீதமாவது வரி வசூலித்து விட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,

“கோவை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி,காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் அதிக
தொகை நிலுவை வைத்துள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் நிலுவை தொகைகைளை செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதிகமான நிலுவை தொகை வைத்துள்ள நபர்களின் பெயர், நிலுவை தொகை உள்ளிட்ட விபரங்கள் தினசரி
நாளிதழ்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது,” என்றார்.

மேலும் படிக்க