• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தலைவர் பொங்கல் வாழ்த்து

January 13, 2017 தண்டோரா குழு

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பொங்கல், லோஹ்ரி, மற்றும் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

குளிர்காலத்தின் கடைசி நாளைக் குறிக்கும் தினமாக லோஹ்ரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பஞ்சாப், புது தில்லி மற்றும் ஹிமாசலப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) லோஹ்ரி மற்றும் மகர சங்கராந்தியும் சனிக்கிழமை (ஜனவரி 14) தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

இந்த திருவிழாக்களை ஒட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது செய்தி:

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்களுக்கு லோஹ்ரி, மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் திருவிழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விழாக்கள் அன்பு, இரக்கம் மற்றும் மகிழ்ச்சியால் சமுதாயத்தில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைக்கட்டும். விவசாயிகளின் கடின உழைப்பைப் பெருமைப்படுத்தி இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்த திருவிழா நாட்கள் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பையும் தரட்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் அறுவடையை மையமாக கொண்டது லோஹ்ரி பண்டிகை. அப்பண்டிகை தினத்தின் இரவு ஆண்டில் பெரிய இரவாகக் கொண்டாப்படுகிறது.

பாரம்பரியத்தின்படி, மக்கள் நெருப்பைச் சுற்றி வந்து, கஜாக், கடலை மிட்டாய், அவல், சோளப்பொரி (பாப்கார்ன்), எள் விதைகள், வெல்லம், வேர்க்கடலை ஆகிய உணவு பொருள்களைக் கடவுளுக்குப் படைப்பார்கள். மாலை நேரத்தில் இசை மற்றும் பாங்க்ரா நடனம் ஆடி மகிழ்வார்கள்.

மகர ராசியின் தொடக்கத்தை குறிக்கும் நாளாகவும் சூரியனுக்காக சமர்ப்பிக்கும் நாளாக மகர சங்கராந்தி இந்துக்களால் கொண்டாப்படுகிறது. தமிழகத்தில் அறுவடை நாளாம் பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க