• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிஜிஎஸ்எச்எஸ் மருத்துவமனை திறப்பு

March 22, 2023 தண்டோரா குழு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெரும் வகையிலான சிஜிஎஸ்எச்எஸ் மருத்துவமனை கோவையில் திறப்பு விழா செய்யப்பட்டது.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர் முயற்சிக்கு பலனாக இந்த மருத்துவமனை கோவையில் அமையப்பெற்றுள்ளது.இம்மருத்துவமனையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு கரூர், திண்டுக்கல் மற்றும் கேளர மாநிலம் பாலக்காடு மாவட்டங்களை சேர்ந்த ராணுவத்தினர், ஒன்றிய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பத்தினர் பயனடைவர்.
ராணுவத்தினர்,மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசின் ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை செலுத்தி இலவசமாக சிகிச்சை பெறுவதற்கு சிஜிஎச்எஸ் (சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம்) மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளது.

இந்த மருத்துவமனை தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது.
சிஜிஎச்எஸ் மருத்துவ மையத்தின் கிளையை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை மையப்படுத்தி கோவையில் துவக்க வேண்டும். இதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இத்துறை சார்ந்த ஒன்றிய அரசு அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.

இதன்தொடர்ச்சியாக, சிஜிஎச்எஸ் அமைத்திட வலியுறுத்தி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு கரூர், திண்டுக்கல், பாலக்காடு ஆகிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தைப் பெற்று மத்திய சுகதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதி வலியுறுத்தினார். இதனையடுத்து, ஒன்றிய சுகாதாரத்துறை கோயமுத்தூர் உள்ளிட்டு நாடு முழுவதும் 16 இடங்களில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையங்களை அமைக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்புதலை வழங்கியது. இதன் தொடர்ச்சியாக இதற்கான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில், புதனன்று இதன் திறப்புவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் Central Government Health Scheme (CGHS) நல மையம் திறப்பு விழா நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி காட்சி மூலமாக மையத்தினை திறந்து வைத்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முறைப்படி மருத்துவ மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க