• Download mobile app
01 Nov 2024, FridayEdition - 3187
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொங்கல் திருநாள் ஊக்கமும் உற்சாகமும் வழங்கட்டும் – ஸ்டாலின்

January 13, 2017

“தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் நலத்திற்கும் அயராது பாடுபட பொங்கல் திருநாள் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கட்டும்” என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வு நலிந்துள்ளது. தமிழர்களின் மரபார்ந்த வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” எனும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அரசாங்கத்துடன் சட்டவழியிலான மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலிலும், நமது போராட்டங்களுக்கான ஊக்கம் பெற பொங்கல் விழா கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.

நம் மீது திணிக்கப்பட்ட பண்டிகைகளுக்குப் பதிலாக, நம்முடைய மண்ணின் அடையாளமான பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக மாற்றியது திராவிட இயக்கம். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பாவேந்தர் பாரதிதாசனும், இன்னும் பல தமிழறிஞர்களும் பெருந்தலைவர்களும் பொங்கல் நன்னாளைத் தமிழர் திருநாளாக முன்னெடுக்கும் முயற்சியில் அயராது உழைத்து வெற்றி பெற்றனர். இயற்கைக்கும் உழவருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்நாளில், நமது பண்பாட்டு விழாவை மீட்டெடுத்த இந்தத் தலைவர்களையும் நன்றியுடன் நெஞ்சில் நிறுத்துவோம்.

திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, வரலாற்றுப் பார்வையுடன் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதை நடைமுறையாக்கி கொண்டாடச் செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் நலத்திற்கும் அயராது பாடுபட பொங்கல் திருநாள் நம் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கட்டும். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்-புத்தாண்டு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க