• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

March 20, 2023 தண்டோரா குழு

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் TMS.அப்பாஸ், தலைமையில் கோவை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், ஆகியோர் பங்கேற்று கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் மாவட்ட பொறுப்பு நிர்வாக குழு கலைக்கப்பட்டு புதிய மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர். பின்பு அலுவலகத்தின் முன்பு தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக்கிடையே கட்சி கொடியை பொறுப்பு குழு தலைவர் TMS.அப்பாஸ், தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ATR.பதுருதீன், ரஹ்மத்துல்லா, மன்சூர், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

மேலும் படிக்க