• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

March 14, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் சின்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடினர். அவர்களை காவலர்கள் துரத்தி அதில் ஒருவரை பிடித்து, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் கத்தி-1, பெரிய இரும்பு கம்பி-1 ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பிடிபட்டவரை விசாரிக்க அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (30) என்பது தெரியவந்து, மேற்படி நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இரவு அலுவலில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் படிக்க