• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனித பிளோமினா ஆலயம்

September 24, 2018 tamil.nativeplanet.com

மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் புனித பிளோமினா ஆலயத்தை தவறாமல் சென்று பார்த்து வருகின்றனர்.

இந்த கம்பீரமான தேவாலயம் 1933ம் ஆண்டு மகாராஜா மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1941ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஐரோப்பிய காத்திக் கட்டடக்கலை அம்சங்களை பின்பற்றி கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தில் பலிப்பீடத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள நிலவறைத்தளத்தில் 3ம் நூற்றாண்டை சேர்ந்த தெய்வீக பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேவாலயத்தில் தள வடிவமைப்பு புனித சிலுவையை மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிலுவையை ஒத்த வடிவத்தினை கொண்ட இந்த தேவாலயத்தில் சிலுவையின் நெடுக்கில் செல்லும் தூணைக் குறிக்கும் பகுதி பக்தர்கள் கூடும் சபையாகவும் குறுக்காக செல்லும் சிலுவைப்பகுதியை குறிக்கும் பகுதியில் இரு பக்கத்திலும் ஒன்றில் பலிபீடமும் மற்றொன்றில் ஸ்தோத்திர இசைக்கூடமும் வருமாறு இந்த தேவாலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேவாலயத்தில் சுற்றுலாப்பயணிகள் செயிண்ட் பிளோமினா மற்றும் புனித இயேசுவின் சிலைகளை கருவறையின் பளிங்கு பீடத்தில் காணலாம். இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளில் கிறிஸ்துவின் பிறப்பு, சிலுவைத் தண்டனை, கடைசி விருந்து, உயிர்தெழுதல், முக்தியடைதல் போன்ற காட்சிகள் வண்ண ஓவியங்கள் மூலம் தீட்டப்பட்டுள்ளன.

இந்த தேவாலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் இங்கு 54 மீட்டர் உயரமுள்ள இரண்டு தூண் கோபுரங்கள் அமெரிக்கவில் நியூயார்க் நகரிலுள்ள செயிண்ட் பாட்ரிக் ஆலயத்தில் உள்ளது போன்றே அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க