• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறப்போர் இயக்கம் பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி

March 10, 2023 தண்டோரா குழு

தமிழக முதல்வர் நாளை கோவை கருமத்தம்பட்டியில்,விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்து நடத்தும்,பாராட்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.இந்த விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வருக்கு விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.இதில், பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தல் நடைபெற்றதால், ஈரோடு நீங்களாக, 43 குடோனில் இருந்து மொத்தம் 96 கோடி ரூபாய்கான டெண்டர் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் என்பது அபத்தமானது, அவர் திரும்ப பெற வில்லை எனில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ், நித்தியா மனோகரன், ஏர்போட் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க