• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் – மீண்டும் குடும்பத்தினரிடம் இணைந்தார்

March 9, 2023 தண்டோரா குழு

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவர் எலக்ட்டிரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ருக்குமணி (50). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் எலக்ட்டிரீசியன் தொழில் செய்து வருகிறார். மகள் இன்ஜினியரிங் படித்து வருகிறார். ருக்குமணிக்கு ஒரு தங்கை உள்ளார். அவரது பெயர் உமாதேவி(40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

செல்வராஜ் குடும்பத்தார் இவரை பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர். இதனிடையே உமாதேவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணமல் போய் உள்ளார். குடும்பத்தார் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளா அரசு வீடற்று சாலையில் சுற்றுபவர்களை மீட்டு அவரது குடும்பத்தாரிடம் சேர்க்கும் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காந்திபவன் அறக்கட்டளை நிர்வாகிகள் கேரளா கொல்லம் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உமாதேவியை மீட்டுள்ளனர். பின்னர் அறக்கட்டளை செயலாளர் புனலூர் சோமராஜன் ஏற்பாட்டின் பேரில் அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் உமாதேவி அவரது உறவினர்களை பற்றி தெரிவித்தார். இதனை அடுத்து கோவை கருமத்தம்பட்டி போலீசாரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். கருமத்தம்பட்டி போலீசாரின் முயற்சியால் உமாதேவியின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை கருமத்தம்பட்டி காவல் நிலையில் உமாதேவியை அவரது குடும்பத்தாரிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில்,

“எனது மாமியர் இருப்பதற்கு முன்னால் உமாதேவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனது குடும்பம் பாரமரித்து வருகிறோம். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு அண்டுகளுக்கு முன் காணமல் போனார். பல்வேறு இடங்களில் தேடி அலைந்தோம். தற்போது கிடைத்துள்ளார். அவர் கிடைக்க முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகள்,” என்றார்.

உமாதேவி தனது குடும்பத்தாரை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். இரண்டு அண்டு பின் காணமல் போனவர் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க