• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 200 பேர் ரகசிய கண்காணிப்பு

March 8, 2023 தண்டோரா குழு

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என கோவையில் 200 பேர் ரகசிய கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்தது. இதில் காருக்குள் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (27) பலியானார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், முகமது பாரூக் உள்பட 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசிய கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.இந்நிலையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் காரணமாக கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தொடர்புடையவர்கள், ஆதரவானவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டது. அதில் 200 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் சமூக வலைதளத்தில் எந்த மாதிரியான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்? பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கண்காணித்து வருகிறோம்.

இதற்கிடையே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இணைய தள பக்கத்தை யாரேனும் பதிவிறக்கம் செய்து உள்ளனரா? ஆதரவு வாசகங்களை பதிவிட்டு உள்ளார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது உண்மைதானா? அல்லது அமைப்பின் பெயரில் வேறு யாராவது வெளியிட்டார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான கருத்துக்களை யாராவது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்களா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க