• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல மனிதர்களின் வாழ்வை வண்ணமயமாக மாற்றும் இளம் தளிர்

March 8, 2023 பா. ஸ்ருதி

ஹோலி பண்டிகையான இன்று வண்ணங்கள் தூவி கொண்டாடி கொண்டிருக்கும் சமூகத்தின் நடுவில், கோவையை சேர்ந்த ஒரு சமூக நல அறக்கட்டளையான – இளம் தளிர் பல மனிதர்களின் வாழ்வை வண்ணமயமாக மாற்றி வருகின்றது.

நண்பர்கள் சேர்ந்து தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, கடந்த மூன்று வருடங்களாக சமூகத்தில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறது.மரம் நடுதல், உணவு வழங்குதல், இரத்த தானம், விழிப்புணர்வு முகாம் செய்யல் ஆற்றி வருகிறது.

இளைஞர்கள் மனதில் மனிதம் என்ற அற்புதத்தை விதைக்கும் நோக்கத்தில் அறக்கட்டளையில் தன்னார்வு தொண்டு செய்ய இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அம்சங்களை வழிவகுத்து இருக்கிறது.

இளம் தளிர் இயக்குனர் ஹரிஹர் கூறுகையில்,

“தமிழகத்தின் அணைத்து மாநிலத்திலும் எங்களது சமூக பணியை செயலாற்றி வருகின்றோம்எங்களது நோக்கம், கோவையை பசி இல்லா கோவையாக மாற்றுவது. மற்றும் இரத்தம் கிடைக்காமல் எந்த உயிர் இழப்பும் நிகழ கூடாது. இப்பொது, சுமார் 250 தன்னார்வ தொண்டர்கள் இருக்கிறார்கள். அனைவரும் இளைஞர்கள். இவர்களையும் இவர்களின் செய்யலையும் பார்த்து ஒவொரு இளைஞகளும் சமூகத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வருவார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.

மேலும் படிக்க