• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் அதிகம் -கோவையில் 14 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க முடிவு

March 6, 2023 தண்டோரா குழு

கோவை பீளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்கார்ட் நிறுவனத்தால் 114.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சத்து 94 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி நிறுவனங்களுக்காக புதிய கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்த பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி , மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இளைஞர்கள் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.பொறியியல் பட்டதாரிகள் அதிகம் இருக்கும் பகுதி கோவை. இங்கு
எல்கார்ட் நிறுவனம் மூலமாக டைடல்பார்க் வளாகத்தில் கட்டபட்டு வந்த கட்டுமான பணி தாமதமாக இருந்ததால் நேரில் ஆய்வு செய்ய முதல்வர் உத்திரவிட்டார். இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிட்டம் 114 கோடி மதிப்பீ்ட்டில் 6 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகின்றது.தீயணைப்பு வசதி,லிப்ட் வசதி,பார்க்கிங் என அனைத்து வசதிகளும் கொண்டதாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த வளாகத்தில் 26 கம்பெனிகளுக்கு இடம் கொடுக்க முடியும்.இதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். ஒப்பந்த்தாரர்கள் வரும் ஏப்ரல் 30 ம் தேதிக்குள் இந்த கட்டுமான பணி முடிவடையும் என தெரிவித்து இருக்கின்றனர்.அதன் பின்னர் 26 நிறுவனங்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்படும். அதன் மூலம் 14,000 பேர் வரை வேலை வாய்ப்பு பெற இருக்கின்றனர்.

கோவையில் ஐ.டி நிறுவனங்கள் அமைய இன்னும் கூடுதலாக கட்டிடடம் தேவை இருக்குமானால் அரசு இடங்கள், தனியார் இடங்களை கைபடுத்தி கட்டப்படும். இளைஞர், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்த அரசு முனைப்புடன் இருக்கிறது.
தமிழகத்தில் பொறியில் பட்டதாரிகள் அதிகம். மாவட்ட தலைநகரங்களிலும்தேவை இருக்குமானால் ஐ.டி நிறுவனங்களுக்கு கட்டிடவசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க