• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்

March 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை சாதி, மொழி மற்றும் இனப்பிரச்சனைகள் ஏதும் ‌ நடைபெறாத வண்ணம்‌ மாவட்ட நிர்வாகம்‌ சிறப்பான துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம்‌ மற்றும்‌ பொது அமைதியினை பராமரித்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையில் இருந்து அவர்கள் வெளியேறி வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவை அனைத்தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும்.

பிறமாநில தொழிலாளர்களுக்கு குறைகள்‌ மற்றும்‌ புகார்கள் தீர்ப்பதற்காக ‌மாவட்ட வருவாய்‌ அலுவலரை தலைவராக கொண்ட \”புலம்பெயர்‌ தொழிலாளர்கள் குறைகளைவு குழு அமைக்கப்பட்டு அதன் மூலம்‌ பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் துறையின் மூலமும் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே பிறமாநில தொழிலாளர்கள்‌ தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில்‌ செயல்பட்டுவரும்‌ பேரிடர்‌ மேலாண்மை பிரிவில்‌ இயங்கி வரும்‌ 1077 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்‌.
மேலும்‌ கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி, கைப்பேசி எண் 0422-2300970, 9498181213, 8190000100, 9443808277 மற்றும் கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ அலுவலக கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண் 9498181212, 7708100100 ஆகியவற்றிற்கும்‌ தொடர்புகொண்டு தகவல்‌ தெரிவிக்கலாம்‌.

மேலும் வெளி மாநில தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்து தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும். சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கவும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க