• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய ஒப்பந்த விவரக் குறிப்புகள் ஒட்டு மொத்த ஜவுளி துறையினருக்கு நன்மை பயக்கும் – சைமா

February 28, 2023 தண்டோரா குழு

விலை ஏற்ற இறக்கம் காரணமாக2007 பிப்ரவரி முதல் பருத்தியை அத்தியாவசியபொருட்கள் சட்டத்தில் இருந்து நீக்கிய பிறகு, இந்திய ஜவுளித்தொழில் சவால்களை சந்தித்து வருகிறது.மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்எனப்படும் MCX தளத்தில் நடைபெறும் எதிர்கால பருத்தி வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித் தொழிலின் செயல்திறனுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி பருத்தி விலையை அடிக்கடி பாதித்து வந்தது.

இந்த சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க,மாண்புமிகுமத்திய ஜவுளித்துறை அமைச்சர்,பியுஷ் கோயல்,ஒரு ஜவுளி ஆலோசனைக்குழுவை சுரேஷ். ஏ.கோடக் அவர்களின் தலைமையில் அமைத்தார். அந்த ஆலோசனைக் குழுஇது வரை ஐந்து கூட்டங்களை நடத்தியுள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அவர்கள் பருத்தி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார்.

அமைச்சர் வழிகாட்டுதலின் கீழ் MCX -ன் பருத்தி தயாரிப்புஆலோசனைக் குழு, முழு ஜவுளிமதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கி மறுசீரமைக்கப்பட்டு ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. MCX -ன் பருத்திதயாரிப்பு ஆலோசனைக் குழு மற்றும் SEBI -ன் ஒப்புதலின் அடிப்படையில், MCX புதிய ஒப்பந்தத்தை பிப்ரவரி 13, 2023ம் தேதியன்று அறிமுகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 27, 2023ம் தேதி அன்று கோவை ரெசிடென்சி ஹோட்டலில் பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த MCX தனது பயிலரங்கை நடத்தியது. மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில்,சைமாவின் தலைவர்.ரவிசாம் வரவேற்புரை ஆற்றினார். இந்திய ஜவுளிக்கூட்டமைப்பின் தலைவர் மற்றும் MCX -ன் பருத்தி தயாரிப்பு ஆலோசனைக்குழுவின் தலைவரான, த.ராஜ்குமார் முக்கிய குறிப்பு உரையாற்றினார்.

இந்திய பருத்திகூட்டமைப்பின் கௌரவ செயலாளர்,திரு.நிஷாந் ஆஷர் சிறப்புரை ஆற்றினார். திரு.எம்.அரவிந்,ஆலோசகர்,இழப்பு காப்பு வணிகம் மற்றும் பத்ருதீன்கான்,துணை தலைவர், MCX மற்றும் ஞானசேகர் தியாகராஜன், Commtrendz Research ஆகியோர் பருத்தி இழப்புகாப்பு வணிகம் மற்றும்பருத்தி ஒப்பந்த விவரக் குறிப்புகள் பற்றி விளக்ககாட்சிகளை காண்பித்து உரையாற்றினர்.

மேற்படி பயிலரங்கிற்கு முன்னதாக, இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர்,.த.ராஜ்குமார் மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர்,ரவிசாம் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது,தடையற்ற சந்தை பொருளாதாரத்தின் கீழ், ஜவுளிமதிப்புச் சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களும்MCX தளத்தில் பருத்திஎதிர்கால வர்த்தகத்தில் தீவிரமாக பங்கு பெறுவது அவசியமாகிவிட்டதாக அவர்கள் கூறினார்கள்.திருத்தப்பட்ட பருத்தி ஒப்பந்த விவரக்குறிப்புகள், ஆயத்தஆடைகள் உட்பட முழு ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள விவசாயிகள்,விசைத்தறியாளர்கள், வணிகர்கள்,நூற்பாலைகள்மற்றும் இதர ஜவுளிப் பிரிவினர்களின் நலனை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று ராஜ்குமார் மற்றும் ரவிசாம் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், ஜவுளிப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு 3 முதல்4 மாதங்களுக்கு விலை உறுதி செய்ய வேண்டியிருப்பதால்,பருத்தி விலையில் காணும் ஏற்ற,இறக்கங்கள் காரணமாக,ஏற்றுமதியாளர்கள் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டும்என்று துணி, ஆடை,படுக்கை விரிப்பு உற்பத்தியாளர்கள் கோரி வந்தனர். அடிக்கடி மாறும்விலைகளால், அவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறிவந்தனர்.

ஜவுளித்துறையின்பருத்தி நுகர்வு 300 முதல் 320 இலட்சம் பேல்கள் என்று இருக்க,நாட்டின் ஒட்டுமொத்த பருத்திஉற்பத்தி 340 முதல் 360 இலட்சம் பேல்களாக உள்ளது. அதே சமயத்தில் MCX தளத்தில் வணிகத்தின் அளவு சுமார் மூன்று இலட்சம் பேல்கள் என்ற அளவிலேயே உள்ளது என்று அவர்கள்மேலும் தெரிவித்தனர். பருத்தியை நேரடியாக விநியோகிப்பது என்பது மிகமிக குறைவாக உள்ளதால், நூற்பாலைகளின் பங்கு இந்த வர்த்தகத்தில் இல்லை. MCX-ன் புதிய ஒப்பந்த விவரக்குறிப்புகள் அதிக பருத்தியைவர்த்தகத்தில் கொண்டு வரும் என்றும்,பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என்றும், ஜவுளி சங்கிலியில்உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் என்றும் தாங்கள் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க்பருத்தி எதிர்கால வணிகம் மற்றும் சீனா பருத்தி எதிர்கால வணிகம் ஆகியவற்றில் 80 முதல்90 சதவீதம் வரை பருத்தி நேரடியாக பயனாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன என்றும்அவர்கள் தெரிவித்தனர்.அரசின் தலையீடுமற்றும் MCX-ன் பருத்தி தயாரிப்பு ஆலோசனைக் குழுபருத்தி விவரக் குறிப்புகளை மறுசீரமைத்ததற்கு ராஜ்குமார் மற்றும் ரவிசாம் ரவிசாம்ஆகியோர் தங்களது நன்றிகளைதெரிவித்துக் கொண்டுள்ளனர்.

MCX -ன் பருத்தி எதிர்கால வணிகத்தில்தினசரி விலை வரம்பு,அபராதம் போன்ற பிரச்சனைகளுக்கும் வரும் மாதங்களில் தீர்வு கண்டு அவைகளுக்கு விடை கண்டால்,பருத்தி விலையில் ஊகங்களை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.பருத்தி விலையில் ஏற்ற இறக்கத்தின் அபாயத்தை குறைக்க, ஜவுளித் சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் MCX-ன் பருத்தி எதிர்கால வணிகத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க