February 28, 2023
தண்டோரா குழு
போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும்ஒழிக்கும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி பகுதியில் (சரவணபவன் ஹோட்டல் அருகில்) கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம்
மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கருமத்தம்பட்டி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா (32) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.2,00,000 மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.