தனது உயில் சார்ந்த விவசாய பூமி சொத்திற்கும், தனது உயிருக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தராவிட்டால் தன்னை குடும்பத்தோடு சேர்த்து கருணை கொலை செய்து விடுங்கள் எனக் கோரி காளியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.
பேரூர் நரசி புரத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் ஏழு ஆண்டுகளாக அவரது உயில் சார்ந்த விவசாய பூமி சொத்து மற்றும் உயிருக்கு வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது விவசாய பூமி சொத்தை கூட்டு சதி செய்து மோசடி செய்த நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்குப்பதிய கூறி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைத்தும் எவ்வித பலனும் இல்லாததால் தன்னை குடும்பத்துடன் கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார்.
சங்கு ஊதி கருணை கொலை செய்ய வேண்டி அவர் கோரிக்கை மனு கொண்டு வந்திருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு