• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேபாள்-இந்தியா இடையேயான பாரா அமர்வு எரிபந்து போட்டி, தங்கப் பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்

February 27, 2023 தண்டோரா குழு

நேபாளில் நடைபெற்ற பாரா அமர்வு எரிபந்து போட்டியில் தங்க பதங்களை வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்குமாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்தார்.நேபாள்-இந்தியா இடையேயான இரண்டு நாள் போட்டியாக கடந்த 19மற்றும்20ஆம் தேதியன்று நேபாளில் உள்ள காரமண்டோவில் பாரா அமர்வு எரிபந்து போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகம் சார்பில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சதீஷ்குமார், மோகண்குமார் உட்பட ஆகிய இருவர் தேர்வாகி மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் போட்டியில் பங்கேற்றனர்.மொத்தமாக இந்தியா சார்பில் 14வீரர்கள் பங்கேற்று விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க