• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்- சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

February 27, 2023 தண்டோரா குழு

சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை அருகே ரயில் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக, பாலக்காட்டில் இருந்து பிப்ரவரி 28ம் தேதி பொள்ளாச்சி வழியாக செல்லும் பாலக்காடு – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் திண்டுக்கல் – சென்னை இடையே இயக்கப்படாமல், விழுப்புரம் – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இதனால், கரூர், மொகானூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்பது தவிர்க்கப்படும். இருப்பினும், கூடுதல் நிறுத்தங்களாக இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, தாம்பரம் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், மேட்டுப்பாளையம் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் பிப்ரவரி 28ம் தேதி, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். எம்.ஜி.ஆர்.சென்னை சென்ட்ரல் – கோவை விரைவு ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க