February 27, 2023
தண்டோரா குழு
டெல்லி துணை முதலமைச்சர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆஜராகும்படி சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று 8 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு கைது செய்தது.
இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு டெல்லி துணை முதலமைச்சர் கைது செய்த மத்திய அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மண்டல பொறுப்பாளர் வாமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.