• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் கோவையில் ஆய்வு

February 25, 2023 தண்டோரா குழு

ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் ஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர் சம்பத், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் நேற்று கோவை வாலாங்குளம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது. இதனிடையே ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் ஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர் சம்பத், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் நேற்று கோவை வாலாங்குளம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தாமஸ் பார்க் மீடிய டவரில் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டிருப்பதை அவர்கள் மிகவும் ரசித்து பார்த்து மாநகராட்சி அதிகாரிகளை பாராட்டினார்கள்.

பின்னர் ஒன்றிய ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘

இந்தியாவின் பிற நகரங்களை காட்டிலும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது மக்கள் ஆர்வமுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை உபயோகம் படுத்துவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளோம். வரும் மே மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டியின் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்,’’ என்றனர்.

மேலும் படிக்க