• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

February 22, 2023 தண்டோரா குழு

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்கவில்லை. அதிகார அத்துமீறல் நடக்கிறது. அந்தந்த பகுதி வாக்காளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறது. அந்தந்த வீதிகளில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்படுகிறார்கள். அன்றாட கூலி வேலைக்கு செல்லும் நபர்களாக இருந்தால், அவர்களுக்கு அன்றாடம் காலையும், மாலையும் பணஉதவி வழங்கப்படுகிறது.

குக்கர், கொலுசு என பரிசுப்பொருட்களும் வழங்கப்படுகிறது. இத்தகைய செயல், ஜனநாயகத்துக்கு இழைக்கக்கூடிய மிகப்பெரிய அநீதி ஆகும். இது, அப்பட்டமான அத்துமீறல், ஜனநாயக படுகொலை. இதை, தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது முறையல்ல. இந்த விதிமீறல்களை தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள், மைக்ரோ பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என தெரியவில்லை.

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் புதிய தமிழகம் கட்சி நீதிமன்றத்தை அணுகும். இந்த அத்துமீறல் தொடர்ந்தால், இனி வரும் தேர்தல்களில் சாமானியன் போட்டியிட முடியாத நிலை உருவாகும். எனவே, தேர்தல் ஆணையம் தனக்கு உண்டான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். ஜனநாயக விரோத செயல்களில் எவரும் ஈடுபடாத வகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

மேலும் படிக்க