• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவுத்தம்பதி ஆலமர முனியப்பசாமி கோவில் சிவராத்திரி விழா

February 20, 2023 தண்டோரா குழு

மாவுத்தம்பதி ஆலமர முனியப்பசாமி கோவில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் ஆதி தமிழர்களால் வணங்கப்பட்டு வந்த கேரள,தமிழக எல்லையில் உள்ள பழமை வாய்ந்த ஆலமர முனியப்பசாமி கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பெண்கள் குழந்தைகள் வள்ளிகும்மி ஆடி அசத்தினர். கோவையில் பண்டைய சேர,சோழ,பாண்டிய அரசுகளுக்கு யானைகளை போர் முறைகளுக்கு பழக்கி வழங்கும் வரலாற்றை கொண்ட மாவுத்தம்பதி கோவை,கேரள எல்லை மலை கிராமத்தில் அமைந்துள்ளது.ஆலமர முனியப்பசாமி கோவில்,தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெற்ற ஆண்டு மகாசிவராத்திரி விழாவை கிராம மக்கள் இணைந்து கொண்டாடினர்.

விழாவை முன்னிட்டு,பழங்கால மக்களின் உணவு மற்றும் வாழ்க்கை வழிமுறைகளை போற்றும் விதமாக பண்டைய பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனை தொடர்ந்து சுமார் நூறுக்கும் மேற்பட்ட கிடாய்களை வெட்டி விருந்து படைக்கும் நிகழ்ச்சியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி முன்னதாக நடைபெற்ற நவீன் பிரபஞ்ச குழுவினரின் வள்ளி கும்மியில் சிறுவயது குழந்தைகள், பெண்கள் என நடனமாடி அசத்தினர்.இதில் மாவுத்தம்பதி,சின்னம்பதி,முருகம்பதி என உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க