February 16, 2023
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி 82வது தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வெரைட்டி ஹால் ரோடு சிட்டி உயர்நிலைப் பள்ளிக்கு கோவை தெற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.50 லட்சம் மதிப்பில் தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாணவ, மாணவர்களுக்கு கணினி இருக்கைகள் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாணவர்கள் கல்விக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும். குறிப்பாக பெண் மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும்.
மாநகராட்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக கோவை வெரைட்டி ஹால் ரோடு சிட்டி உயர்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் அவ்வாறு தேர்ச்சி பெற்றால் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி உபகரணங்களையும் கோவை தெற்கு தொகுதி நிதியில் இருந்து வழங்க உறுதி அளிக்கிறேன். என தெரிவித்தார்.
இதில் கோவை மாவட்டம் தெற்கு தொகுதி பாஜக 82வது மண்டல் நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.