• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அகில பாரத மக்கள் கட்சியினர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நினைவு தூண் அமைக்க கோரிக்கை

February 15, 2023 தண்டோரா குழு

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று, 25வது ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில பாரத மக்கள் கட்சியினர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவு தூண் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி .,14 ஆம் தேதி கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், மோட்சதீபம் ஏற்றிபுஷ்பாஞ்சலியை பல்வேறு இந்து அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக இதன் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் கோவை பர்லி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கையில் தீபத்தை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக செய்தியாளர்களிடம் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமநாதன் மற்றும் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.அப்போது, குண்டுவெடிப்பில் இறந்த பொது மக்களின் நினைவாக ஆர் எஸ் புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா துணை தலைவர் சேகர் செய்தி தொடர்பாளர் நாகராஜ் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மோகன் வினோத் மணிகண்டன் மகளிர் அணி தலைவி ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க