• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிமன்ற வளாகம் அருகே ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் – 7 பேர் கைது

February 14, 2023 தண்டோரா குழு

கோவை நீதிமன்ற வளாகம் அருகே பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் தப்ப முயன்ற போது போலீசார் அவர்களை சுட்டு பிடித்தனர்.

கடந்த 13ம் தேதி (நேற்று)
கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சரவணம்பட்டி காவல்
நிலையத்தாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ள
கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டனில் வசித்து வரும் கோகுல் (25) கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பிள்புறமுள்ள கோபாலபுரம் 2வது வீதியில் உள்ள இந்தியன் பேக்கரி முன்பாக நின்று கொண்டிருந்தவரை அங்கு கையில் கத்தியுடன் வந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

பட்டப்பகலில் அரங்கேறிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், தப்பியோடிய மர்ம கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவான நிலையில் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் போலீசார் இன்று தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே கோத்தகிரியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை போலீசார் வழிமறித்த போது நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள் கோவை நீதிமன்றத்தில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, 3 வாகனத்தில் வந்த ஜோஸ்வா,தேவபிரியன்,கௌதம், அருண்குமார், பரணி, ஹரி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.இதேபோல் இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார், கட்டபெட்டா பகுதியில் நடத்திய வாகன சோதனையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார், கோவைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும் போது அதில் ஜோஸ்வா மற்றும் அருண்குமார் மேட்டுப்பாளையம் அருகே வாந்தி வருவதாக கூறி வண்டியில் இருந்து போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர்.

இதனை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் காலில் சுட்டு பிடித்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க