January 11, 2017
தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் ஆளுநர் வீட்டின் அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஐக்கிய அரபு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 1௦) கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஆளுநர் வீட்டின் அருகில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
இந்தl் தாக்குதலில் ஐக்கிய அரபு நாட்டின் தூதர் ஜும்மா முஹம்மத் அப்துல்லா அல் கஃபி மற்றும் அவருடன் வந்திருந்த ஐக்கிய அரபு நாட்டின் தூதரக அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.