• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி 35 வது பட்டமளிப்பு விழா: தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்பு

February 11, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கலை,அறிவியல் கல்லூரியின் 35 வது பட்டமளிப்பு விழா ஜி.ஆர்.டி அரங்கத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் து. பிருந்தா வரவேற்பு வழங்கி,ஆண்டறிக்கை வாசித்தார். பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் நிகழ்வைத் துவக்கி வைத்தார்.

பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட,தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி,3877 மாணவர்களுக்கு பட்டங்களையும், 71 தரவரிசை பெற்றவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.கல்லூரி முதல்வர் து. பிருந்தா தொடர்ந்து பட்டமேற்பு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில்,

சிறிய, வலிமையான விதையில் இருந்து வளரும் ஆலமரம், வளர்ந்து பலருக்கும் பயன் தருவது போல 1947 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு, முதல்தரமான கல்வியை வழங்கி வரும் அறிவு ஆலமரமாய் திகழ்கிறது. பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் நகரத்தில் தங்கள் பாரம்பரியத்தைத் தொடர வாழ்த்தினார்.

இந்தியக் கல்வி முறையின் தனித்துவமான பண்புகள் மற்றும் இந்த தனித்துவம் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு எவ்வாறு பங்களித்தது என்பதையும், இந்தியர்கள் கொரோனா தொற்றினை சிறப்பாக நிர்வகித்ததையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை ஊக்குவித்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் நிறைவாக பட்டம் பெற்ற பட்டதாரிகளை வாழ்த்திப் பாராட்டினார். கல்லூரி துணை முதல்வர் ஜெயந்தி நன்றியுரை கூறினார்.

மேலும் படிக்க