• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வார்டுக்கு வார்டு தொழில்வரி வீதங்கள் மாற்றம் -குறுந்தொழில் முனைவோர்கள் அதிர்ச்சி

February 9, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள்( டாக்ட்) சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜேம்ஸ் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் குறுந்தொழில் முனைவோர்கள் ஜாப் ஆடர்கள் செய்து வருகின்றார்கள். கடந்த 3 மாதங்களாக ஒவ்வொரு வார்டில் உள்ள மாநகராட்சி ஆய்வாளர்கள், தொழில் வரி உடனடியாக செலுத்த வேண்டும், அதபோல் குப்பை வரி செலுந்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஒரு சில வார்டுகளில்அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் ஒவ்வொரு விதமாக தொழில்வரி கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.தற்போது கடுமையான தொழில் நெருக்கடியில் உள்ள தொழில்
முனைவோர்களை பலவீதமான வரிகள் கட்ட சொல்வதும்,வார்டுக்கு வார்டு வரி வீதங்கள் மாற்றி சொல்வதும் மிகுந்த வேதனை தருகிறது.

கோவையில் குறுந்தொழில்களின் நிலைகள் அறிந்து அதற்கு, ஏற்ப வரிவிதிப்பு அறிவிக்க வேண்டும்.தமிழகத்தில் கடுமையான மீன்கட்டண உயர்வுக்குப்பின் குறு சிறு தொழில் முடங்கி வருகிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு ஆடர்கள், விலை வித்தியாசத்தால் தமிழகத்தை வீட்டு பிற மாநிலத்துக்கு கைமாறி
செல்கிறது. மின்கட்டணம் உயர்வுக்குப்பின் தமிழகத்தின் தொழில் துறையினர்
கடுமையான நெருக்கடிகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

மின் கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில்குறு சிறு தொழில்களை பாதுகாக்க உயர்த்திய கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க