• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் முழுவதும் 46 தனிப்படை குழுக்கள் மூலம் கஞ்சா வேட்டையாடிய காவல்துறையினர்

February 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் முழுவதும் 46 தனிப்படை குழுக்கள் மூலம் கஞ்சா வேட்டையாடிய காவல்துறையினர்.அதிரடியாக 29 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உட்கோட்டம் வாரியாக துணை கண்காணிப்பாளர் தலைமையில், 46 தனிப்படை குழுக்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 105 நபர்கள் கண்டறியப்பட்டு, அதில் கஞ்சாவுடன் பிடிபட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 28 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்கள் (Cool வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையின் போது மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 4 அவுட்டுகாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காரமடை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரிடமிருந்து 600 லாட்டரி சீட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர் குற்றத்தில் ஈடுபடும் 25 நபர்கள் மீது நன்னடத்தை பிணை பத்திரம் பெற்று எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

கோவை மாவட்ட காவல்துறையின் இதுபோன்ற திடீர் நடவடிக்கைகள் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தொடர்ந்து நடைபெறும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க