மதுரை – திருமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவையில் இருந்து மதுரை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நாகர்கோவில் – கோவை ரயில் விருதுநகர் – கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில் நாகர்கோவில் – விருதுநகர் இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை கோவை – நாகர்கோவில் ரயில், கோவை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில் விருதுநகர் – நாகர்கோவில் இடையே மட்டுமே இயக்கப்படும்.
பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை கோவையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் கோவை – மதுரை தினசரி ரயில் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை திண்டுக்கல் – மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில், கோவை – திண்டுக்கல் இடையே இந்த ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை மதுரை – கோவை தினசரி ரயில் மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திண்டுக்கல் – கோவை இடையே மட்டும் இந்த ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்