• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு – ஜமேஷா முபினின் மனைவி ரகசிய வாக்குமூலம்

February 7, 2023 தண்டோரா குழு

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் மனைவி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை உக்கடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த அக்.23 ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.இதுக்குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இது பயங்கர வாத அமைப்பின் செயல் என தெரியவந்தது.இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.மேலும் இந்த சம்பவத்தில் தற்பொழுது வரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ.அமைப்பினர் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் முதல் குற்றவாளியாக விளங்கும் ஜமேஷா முபினின் மனைவி கோவை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் ஜே.எம்.4 வது நீதிமன்றத்தில் ஜமேஷா முபினின் மனைவி வாக்குமூலம் அளித்தார். அவருக்கு வாய் மற்றும் காது கேளாததால் எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க