• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை-நடிகை அமிர்த அய்யர்

February 6, 2023 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது கோவையில் நடிகை அமிர்த அய்யர் கூறியுள்ளார்.

கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன்.தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன்.கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்துள்ளேன்.

ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும்.ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன்.நேற்று வந்த போது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன்.அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என தெரிவித்தார்.

மேலும் படிக்க