• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்களுக்கான தேசிய வூசு லீக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு

February 6, 2023 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற பெண்களுக்கான தேசிய வூசு லீக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதினோரு இலட்சம் ரொக்கப்பரிசு தொகை வழங்கப்பட்டது.

கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வூசு லீக் போட்டிகள் கோவையில் முதன் முறையாக நடைபெற்றது. இந்திய மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் ,மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.சான்சூ,டாவுலு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் தவ்லு பிரிவில் முதலிடத்தை இந்திய விளையாட்டு ஆணையம், இரண்டாவதாக மத்திய பிரதேசம், மூன்றாவது இடத்தை மணிப்பூர் அணியும் வென்றன.இதே போல சான்சூ பிரிவில் முதலாவதாக ஹரியானா,இரண்டாவது இடத்தை மணிப்பூர்,மூன்றாவது இடத்தை ராஜஸ்தான் அணிகளும் பிடித்தன.

இந்நிலையில் போட்டி இறுதிநாளில் குமரகுரு கல்லூரி ஆடிட்டோரிய அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மண்டல வருமான வரிதுறை முதன்மை ஆணையர் பூபால் ரெட்டி,மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளார் சங்கர் வானவராயர், சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு,வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர். இதில்,முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்று,நான்காம் இடம் பிடித்தவர்களுக்கு முப்பதாயிரம்,இருபதாயிரம்,பதினைந்தாயிரம் என மொத்தமாக பதினோரு இலட்சம் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது.

இதே போல வீராங்கனைகளுக்கு ,கோப்பை சான்றிதழ் ,பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வூசு சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் அப்பாவு, இந்திய வூசு சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் அகமது,மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தமிழக இயக்குனர் மஞ்சுளா, இந்திய வூசு சங்கத்தின் தலைவர் கிஷன் குமார்,தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்சன், குமரகுரு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிலா கென்னடி,உடற்பயிற்சி இயக்குனர் முத்துக்குமார், இந்திய வூசு சங்கத்தின் தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சபீர், கோவை மாவட்ட தலைவர் ஜெயபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க