• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

February 6, 2023 தண்டோரா குழு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார்.

கோவை மாவட்டம் செங்காளிபாளையம் பகுதியில் பிறந்து விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.அவரது பிறந்த நாளை முன்னிட்டு சர்க்கார் சாமகுளம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள், விவசாயிகள் பொதுமக்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி,கோவை மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி உட்பட திமுக வினர் பலர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நாராயணசாமி நாயுடுவின் கடைசி மகள் பிரபாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் சில கோரிக்கைகளையும் குடும்பத்தினர் முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார். இந்த பகுதியில் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவாக நுழைவு வாயில் அமைக்க வேண்டும், அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வரக்கூடிய அவரது நூற்றாண்டு விழாவிற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

மேலும் நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாய பெருமக்களுக்கு தலைவராக முன்னின்று இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த உந்து சக்தியாக இருந்தவர் எனவும் அவரது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மகிழ்ச்சியாக உள்ளதென தெரிவித்தார்.

மேலும் படிக்க