• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இருகூர் அருள்மிகு தங்க நாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக பெருவிழா

February 5, 2023 தண்டோரா குழு

கோவை அடுத்த இருகூர் உதயம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்க நாகம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் தங்க நாகம்மாள், நாக கணபதி, குழு மாயி அம்மன், சேதுபகவான், வெற்றி விநாயகர், ராகு கேது சகிதம், பேச்சியம்மாள், வீரமாத்தி அம்மன், அங்காளம்மன், வாராஹி அம்மன், தன்வந்திரி, பெருமாள், ராஜகாளியம்மன், இசக்கி அம்மன், நீலி அம்மன், சிவன் பார்வதி குடும்பசகிதம், ரேணுகா தேவி, ஆதிபராசக்தி அம்மன், சேவகராஜா, தசநாகம் நாகப்பரிவாரங்கள், சுயம்பு பிள்ளையார், சீரடி சாய்பாபா, கல்கத்தா காளியம்மன், பரமஹம்சர், சாரதா தேவி, காலபைரவர் உள்ளிட்ட அனைத்து விதமான தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த திருக்கோவில் கும்பாபிஷேகத்தை சிவ ஸ்ரீ சிவசுப்பிரமணியம் பரமேஸ்வர பண்டித குரு சுவாமிகள் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வைத்தார். இந்த கும்பாபிஷேக பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்க நாகம்மாளை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து பொது மக்களுக்கும் கோவில் நிர்வாகி தங்கம்மாள் குடும்பத்தினர் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க