• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெம் மருத்துவமனையில் புற்றுநோய் எதிர்கொண்டு போராடும் வீரர்களை ( நோயாளிகளை) பாராட்டும் விழா

February 4, 2023 தண்டோரா குழு

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,ஜெம் மருத்துவமனையில் புற்றுநோயுடன் போராடி உயிர் பிழைத்த 75 நோயாளிகளை ஜெம் மருத்துவமனை கௌரவித்தது.

நோயாளிகள் தங்கள் பயணத்தையும் வெற்றிகரமான போராட்டத்தையும் பகிர்த்து கொண்டனர். இவர்களில் பலர் வயிறு குடல் மற்றும் இரைப்பை மற்றும் மகளிருக்கு வரக்கூடிய புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலர் பாடியும் , நடனமாடியும் , விளையாடியும் , கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த முழு நிகழ்ச்சியும் வாழ்க்கையைக் கொண்டாடுதல் ” என்ற கருப்பொருளின் கீழ் ஜெம் மருத்துவமனை ஒழுங்குபடுத்தியிருந்தது . சில நோயாளிகள் கேர் ஃபார் லைஃப் என்கிற திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொண்டவர்கள்.

இது ஜெம் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும் . வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் ஏழை எளிய மக்களுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்யப்படுகிறது . புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் , முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை சிகிச்சையின் முன்னேற்றங்களை தெரியப்படுத்தும் விதமாகவும் ஜெம் மருத்துவமனையில் அர்ப்பணிப்புடன் இந்த மருத்துவ சேவையை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புற்றுநோயின் அறுவை சிகிச்சையை மேம்படுத்தும் விதமாக ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையை உருவாகியுள்ளது . ஜெம் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை மற்றும் பரிசோதனையை மேற்கொள்ள வசதியாக , இந்த திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் மருத்துவ நல அட்டைகள் இந்த விழாவில் வழங்கப்பட்டன.

ஜெம் மருத்துவமனையின் இணை நிர்வான இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயனாளிகள் பற்றி விளக்கினார். விழாவிற்கு தலைமை விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. பிரதாப் கலந்து கொண்டு , தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்கும் , இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவதற்கும் மருத்துவமனை எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டினார்.

மேலும் புற்றுநோய் வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கியும் கவுரவித்தார் . இக்கூட்டத்தில் ஜெம் மருத்துவமனையனின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் , ரோட்டேரியன்கள் , நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

மேலும் படிக்க