• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக மேம்பாலம் தூண்களில் வண்ண ஒவியங்கள்

February 3, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக மேம்பாலம் தூண்களில் வண்ண ஒவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

கோவையில் சமீபகாலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது.குறிப்பாக பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தது. பலமுறை சுவரொட்டிகள் ஒட்டப்படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் அறிக்கைகள் கொடுக்கப்பட்டாலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மாநகராட்சியில் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழித்து தூய்மையான மாநகராட்சியை உருவாக்கும் விதமாகவும், அலகுபடுத்தும் விதமாகவும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுமார்40க்கும் மேற்பட்ட மேம்பால தூண்களில் உள்ள போஸ்டர்களை அகற்றி வண்ண ஓவியங்களை வரையும் பணியை துவக்கியுள்ளனர். குறிப்பாக இயற்கை சார்ந்த ஓவியங்கள்,பொற்கால ஒவியங்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படம், தமிழகத்தின் வரலாற்று மிக்க திருக்கோயில்களின் ஓவியங்கள் என வரையப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க