February 2, 2023
தண்டோரா குழு
தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நீலகிரி எம்.பி. ஆ. ராசா அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து வரும் கனரக வாகனங்களால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே மாநில நெடுஞ்சாலைத்துறையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள அவிநாசி வடக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.