• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்தியாவின் முதல் முதலாக வைரம் மற்றும் தங்க நகைகள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம்

February 2, 2023 தண்டோரா குழு

இந்தியாவில் வைரம் மற்றும் தங்க நகை தயாரிப்புக்கான ஊழியர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது இவற்றை பூர்த்தி செய்யும் வகையில் கோவையில் முதல் முறையாக பெண்களுக்காகவே பெண்களால் நடத்தப்படும் பயிற்சி மையம் ஆர் எஸ் புரம் டிபி ரோட்டில் 5ம் தேதி தொடங்க உள்ளது.

டைமண்ட்ஸ் இந்தியா என்னும் இந்த பயிற்சி நிறுவனம் வைரம் மற்றும் வைர நகைகள் மற்றும் தங்க வெள்ளி நகைகளை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி அளிக்கும் மையமாக சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் புரம் டிபி ரோட்டில் ஒயிட் பில்டிங் என்ற கட்டிடத்தில் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவக்க விழா நடைபெறுகிறது.சென்னையில் இருக்கும் சென்னை டைமன் மற்றும் நகைகள் வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி இந்த பயிற்சி நிறுவனத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்:

வைரம் மற்றும் வைரத் தொழிலில் ஆசிரியராக மற்றும் பயிற்சியாளராக, ஆலோசகராக 35 வருட அனுபவம் கொண்ட முரளிதரன் தலைமையில் இந்த பயிற்சி நிலையம் தொடங்க உள்ளது. முரளிதரனின் மாணவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் தமிழ்நாடு முழுவதிலும் வைர நகைகள் தொழில் பாடங்களை கற்று சிறப்பாக வைர நகை வியாபாரம் மற்றும் வைர நகைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆசிரியர் பணியை விரிவுபடுத்தி இன்று வைர நகை தொழிலை செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும் வருங்காலத்தில் தொழில் முனைவோருக்கும்,இந்த நிறுவனங்களில் பணியாற்ற தேவையான எல்லா விதமான தொழில் முறை பயிற்சிகளை இந்தியாவிலேயே முதல்முறையாக பயிற்சிக்கு பிறகு நகை தொழில் தொடங்க ஆலோசனை கொடுத்து அவர்களுடைய தொழிலில் உதவி புரிய தொழிலாளர்களையும் தொழிலாளர்களை நிர்வாகிக்க மேலாளர்களையும் உருவாக்கிக் கொடுக்கும் 360° டிகிரி முழுமையான கோணத்தில் உயர்ந்த ஆசிரியர் பணியை செய்ய உள்ளார்.

லண்டன் அமெரிக்கா கலிபோர்னியா நாட்டில் பயிற்சி பெற்றவர்கள்இந்த உன்னத பணியில் அகிலாண்டேஸ்வரி முரளிதரன் மற்றும் சேஷகோபால் முரளிதரன் அவர்களும் இந்த ஆசிரியர் பணியை மேற்கொள் மேற்கொண்டுள்ளனர்.இவர்கள் இருவரும் இந்தியாவில் வைரம் மற்றும் வைர நகை தயாரிப்பு தொழிலை லண்டன் மாநகரத்திலும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திலும் படித்து பட்டம் பெற்றவர்கள்.

இந்த பயிற்சி நிலையத்தில் வைர நகைகள் மற்றும் தங்க வெள்ளி நகைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள தொழில் முனைவோருக்கு சிறந்த வகையில் தொழில் தொடங்க தேவையான எல்லாவிதமான பயிற்சிகளையும் ஒரு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த டைமண்ட்ஸ் இந்தியா என்ற பயிற்சி நிறுவனத்தில் வகுப்புகள் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த பயிற்சி எடுத்துக்கொண்ட தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க தேவையான ஆலோசனைகளும் வழிமுறைகளும் இதைவிட முக்கியமாக தொழிலாளர்களையும் அந்தத் தொழிலாளர்களை நிர்வாகிக்கும் மேலாளர்களையும் இந்த நிறுவனத்தின் மூலமே பயிற்சி அளிக்கப்படும்.

ஆண்டுக்கு 100 பேர் கட்டணமில்லா பயிற்சி

டைமண்ட்ஸ் இந்தியா என்னும் இந்த பயிற்சி நிலையத்தில் மிக சிறப்பு அம்சமாக வருடம் தோறும் 100 தகுதியான மகளிர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக கட்டணம் இல்லாத அதாவது 100% ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சி காலம் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கும், இந்த பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்தவர்கள் நம்முடைய கோவை மாவட்டத்திலும் அல்லது அவர்கள் இருக்கும் ஊருக்கு அருகாமையில் தகுந்த இடத்தில் பணியில் அமர்த்த முழுமையாக உதவிகள் செய்து தரப்படும்.

டைமண்ட்ஸ் இந்தியா சமுதாயப் பணி

டைமண்ட்ஸ் இந்தியா என்னும் இந்த பயிற்சி நிலையத்தில் மிக சிறப்பு அம்சமாக வருடம் தோறும் 100 தகுதியான மகளிர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக கட்டணம் இல்லாத அதாவது 100% ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும், இந்த பயிற்சி காலம் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கும், இந்த பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்தவர்கள் நம்முடைய கோவை மாவட்டத்திலும் அல்லது அவர்கள் இருக்கும் ஊருக்கு அருகாமையில் தகுந்த இடத்தில் பணியில் அமர்த்த முழுமையாக உதவிகள் செய்து தரப்படும்.

கட்டணமில்லா பயிற்சி பெற மகளிர் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க