• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.1000 சலுகை கட்டண பயண அட்டை 1ம் தேதி முதல் 15 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்

February 1, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் (கோவை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு மாதம் ரூ.1000 சலுகை கட்டண பயண அட்டையை (இன்று) 1ம் தேதி முதல் 15 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை பயன்படுத்தி அனைத்து நகர பேருந்துகளிலும் ஒரு நாள் முழுமையும் எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கி பயணம் செய்யலாம். இரவு பேருந்து நீங்கலாக அனைத்து நகரப்பேருந்துகளும், சொகுசு பேருந்துகள் உட்பட பயணம் செய்யலாம்.

இம்மாதம் 16-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பயணம் செய்யலாம். அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரூ.1000 சலுகை கட்டண அட்டையை 1ம் தேதி முதல் 15 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க