• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் பென்சன் ஆர்டர்கள் வழங்கும் நிகழ்வு

January 28, 2023 தண்டோரா குழு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் பென்சன் ஆர்டர்கள் வழங்கும் நிகழ்வு நடக்கிறது

கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உதவி கமிஷனர் (பென்சன்) ஆல்பர்ட் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை குறிக்கும் அகாம் நிகழ்வை வரும் ஆகஸ்ட் 15, 2023 வரை கொண்டாடுகிறது. இது சம்பந்தமாக, பிரயாஸ் தொடர்பான ஒரு நடவடிக்கையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கோவை மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அலுவகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிராயஸ் என்பது பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் நாளில் ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ் ஓய்வூதியத்திற்குத் தகுதியான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உறுப்பினர், ஓய்வூதியக் கோரிக்கையை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம். 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓய்வுபெறும் தகுதியான உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான பென்சன் ரிலிஸ் ஆர்டர்கள் மேற்படி நிகழ்வின் போது வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க