• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்மலாமாதா கான்வென்ட் ஐ.சி.எஸ்.இ/ஐ.எஸ்.சி பள்ளியில் பரிசளிப்பு விழா

January 27, 2023 தண்டோரா குழு

குனியமுத்தூரில் உள்ள நிர்மலாமாதா கான்வென்ட் ஐ.சி.எஸ்.இ/ஐ.எஸ்.சி பள்ளியில்
பரிசளிப்பு விழா பள்ளியின் சார்பில் நடைபெற்றது.

விழாவிற்கு,சிறப்பு விருந்தினர்களாக கோவை டைடல் பார்க் இன்ஃபோஞானா ஸொல்யுஸன்ஸ் ஆபரேஷசன்ஸ் துணை தலைவர் சினு மேத்யு கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை உரையாற்றினார்.தொடர்ந்து இந்த கல்வியாண்டு முழுவதும் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள், கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.

கோவை டைடல் பார்க் இன்ஃபோஞானா ஸொல்யுஸன்ஸ் தொழில்நுட்ப தலைவர் ஜான்சன்,அருட்தந்தை.ஜெய்சன் சோத்ரிகோடு தலைமை வகித்தும்,அருட்சகோதரி.டொமிடில்டா கௌரவ விருந்தினராகவும், மற்றும் பள்ளியின் முதல்வர். அருட்சகோதரி.ஜெயா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலைநிகழ்ச்சிகளான சேக்ஸ்பியர் ஆங்கில நாடகம்,நடனம்,பாடல் நடைபெற்றது. பள்ளியின் நிறுவனரின் 150வது பிறந்த ஆண்டை நினைவு கூறும் பொருட்டு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சியாம் மற்றும் உறுப்பினர்கள் அன்வர் ஜான், பாசறை ரமேஷ், சுரேஷ் குமார், டேனில், ஜோஸ்பின், மெடில்டா, அனிதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க