• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புரோசோன் மாலில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

January 26, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் – சத்தி ரோடு, சரவணம்பட்டியில் அமைந்துள்ளது புரோசோன் மால்.இங்கு இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு புரோசான் மால் வளாகத்தில் புரோசோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பி. பாபு தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

உடன் புரோசான் மாலின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் சி.முரளி மற்றும் மால் வளாகத்தில் உள்ள ஷோரூம் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வரும் ஜனவரி 29-ம் தேதி வரை எண்டு ஆஃப் சீசன் சேல் என்ற பெயரில் 60 சதம் வரை மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை இன்று முதல் ஜனவரி 29-ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.மேலும் இந்த தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரூபாய் 4,999.00 – க்கு பொருட்கள் வாங்கும் போது ரூபாய் 250.00 – க்கு உணவு கூப்பன் வழங்கப்படும். மேலும் வளாகத்தில் அமைந்துள்ள உணவகம் மற்றும் விளையாட்டு அரங்குகளில் பிளாட் 25 சதம் வரை தள்ளுபடியும் உண்டு. மேலும் இன்று (26.01.2023) டி. ஜெ. ஸ்பேரோ இன்னிசை இரவு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

இத்த 60 சதம் வரை தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான துணிகள், காலனிகள், மொபைல் போன்கள், மொபைல் உதிரிபாகங்கள், கண்கண்ணாடிகள், சுற்றுலா பேக்குகள், உணவுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கலாம்.

இன்று முதல் ஜனவரி 29-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவசமாக பார்க்கிங் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க